600 பொலிஸாரை கொன்றமைக்கு கருணா மன்னிப்பு கோரவேண்டும். பிள்ளையான்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள் நல்லிணக்ககுழு முன் சட்சியமளித்த பிள்ளையான் : 1990 ஆம் கிழக்கு மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு நிராயுதபாணிகளாக சுட்டுக்கொல்லப்பட்ட 600 பொலிஸாரின் உறவினர்களிடம் கருணா மன்னிப்புக்கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குழுமுன் சாட்சியமளித்த பிள்ளையானிடம் : கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாரின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்ற தேவையை உணர்கின்றீரா? எனக் கேட்டபோது , நான் 16 வயதினிலேயே புலிகளியக்கத்தில் இணைந்தேன். கிழக்கு மாகாணத் தளபதி என்ற வகையில் இவ்விடயத்திற்கு மன்னிப்புக்கோர வேண்டிய நபர் கருணா எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் பிள்ளையானிடம் இவ்விடயம் தொடர்பாக கேள்வியினை தொடுப்பதற்கான தேவை அங்கிருந்ததா என்ற கேள்வி பலரிமும் எழுந்துள்ளது. காரணம் பிள்ளையான் 1993 - 1994 இடைப்பட்ட காலப்பகுதியிலேயே புலிகளியக்கத்தில் இணைந்திருந்தார். எனவே இச்சம்பம் தொடர்பாக பிள்ளையானிடம் கேள்விகளை தொடுப்பது கேலிக்குரியதாகும்.
0 comments :
Post a Comment