லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்று மரபுரிமையும் உலக சோசலிச புரட்சிக்கான இன்றைய போராட்டத்துக்கு அதன் பொருத்தமுடைமையும் என்ற தலைப்பில், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் இயக்கமும் இலங்கையில் தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளன.
1917 ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, முதலாவது தொழிலாளர்களின் அரசை பாதுகாத்த செஞ்சேனையின் தளபதியாகவும் இருந்தார். லெனின் மறைந்த பின்னர், அவர் சோவியத் அரசின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் ரீதியகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தலைமை வகித்தார். ஸ்ராலினின் காட்டிக்கொடுப்புக்கள் 1933ல் ஹிட்லரை ஆட்சிக்கு வர அனுமதித்ததை அடுத்து, மூன்றாம் அகிலம் செத்துவிட்டது என்ற முடிவுக்கு வந்த ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார். அது 1938ல் ஸ்தாபிக்கப்பட்டது.
1940 ஆகஸ்ட் 21 அன்று, மெக்ஸிகோ கோயோகானில் வைத்து ஒரு ஸ்ராலினிச ஏஜன்டால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். அக்டோபர் புரட்சியை முன்னெடுத்த முழுப் பரம்பரையினதும் மிக நேர்த்தியான பிரதிநிதிகளை உடல் ரீதியில் அழித்த ஸ்ராலினின் சுத்தீகரிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமே ட்ரொட்ஸ்கியின் கொலையாகும்.
ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையும் வேலைகளும் ஒரு ஆழமான சமகால முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த பூகோள இலாப முறைமை, மீண்டுமொருமுறை அடிப்படை பொருளாதார அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ட்ரொட்ஸ்கியின் போராட்டங்களின் படிப்பினைகள், முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்க தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு இன்றியமையாத அரசியல் ஆயுத்தத்தை வழங்குகின்றது.
முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப முதலாளித்துவம் இலாயக்கற்றுள்ளதன் மூலம், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தம் இதற்கு ஒரு துன்பகரமான உதாரணமாகும்.
யுத்தம், ஒடுக்குமுறை மற்றும் வறுமையை எதிர்க்க ஒரு வழியை தேடும் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை எமது பொதுக் கூட்டங்களுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம்.
கண்டி
இடம்: ஜனமெதுர மண்டபம்
திகதியும் நேரமும்: செப்டெம்பர் 23 பி.ப. 3 மணிக்கு
யாழ்ப்பாணம்
இடம்: கூட்டுறவுச் சங்க மண்டபம்
திகதியும் நேரமும்: செப்டெம்பர் 26, பி.ப. 2 மணிக்கு
கொழும்பு
இடம்: புதிய நகர மண்டபம் திகதியும்
நேரமும்: அக்டோபர் 10 பி.ப. 3 மணிக்கு
ஹட்டன்
இடம்: தொழிலாளர் பொழில் மண்டபம்
திகதியும் நேரமும்: அக்டோபர் 24 காலை 10 மணிக்கு
பிரதான பேச்சாளர்: சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் .
No comments:
Post a Comment