Tuesday, September 21, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையை கிழித்தெறிந்தார் ரணில்.

அரசியல் யாப்பின் 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிக்க முடியாது என பகிரங்கமாக அறிவித்ததன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களில் முக்கிய இடத்தை பிடிக்கவிருக்கின்ற மேற்படி பேரவைக்கு எதிர்கட்சிகள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்க இந்நியமனம் தொடர்பாக தெரியப்படுத்திய சில மணிநேரங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என அறிவித்தது.

பாராளுமன்ற மற்றும் நாட்டு அரசியல் நியமனங்கள் உட்பட பல முக்கிய விடயங்களை கையாளவுள்ள இப்பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ள மறுப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மிக முக்கியமான விடயங்களிலிருந்து சறுக்கிச் சென்று வெற்றுக்கோஷமிடவே தகுதியானவர்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. நியாயபூர்வமான விடயங்களை நேருக்கு நேர் நின்று பொறுப்புணர்சியுடன் விவாதிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரில்லை என்பதையும் , தமிழ் மக்களுக்கு வீராவேஷ வார்த்தைகளை பேசி அவலங்களின் மீது நின்று அரசியல்புரியவே விரும்புகின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல் தன்மையை உணர்ந்த ரணில் பாரளுமன்ற பேரவைக்கு த.தே.கூட்டமைப்பின் சுபத்திரனை நியமித்தபோது , அதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தன் ஊடாக இவர்களின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்பார்வைக்கு அரசினை எதிர்கின்றனரே தவிர உளப்பூர்வமாக அவர்கள் அதை செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

1 comments :

Anonymous ,  September 21, 2010 at 8:10 PM  

கூத்தமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தலாம் என்று யோசிப்பது முட்டாள் தனம்,
காலத்தையும், சந்தர்ப்பங்களையும் வீணடிக்காமல்,

யதார்த்தங்களை, சூழ்நிலைகளை, உண்மைகளை புறிந்துகொண்டு
ஆக்கபூர்வமான, பிரயோசனமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.

சுயனல அரசியலுக்காக ஒட்டு மொத்த தமிழினத்தை மீண்டும் பாதாளத்தை நோக்கி நகர்த்தாமல்,

மரியாதையாக அரசியலிலிருந்து விட்டு விலகி, செயதிறனுள்ள, சேவை மனப்பான்மையுள்ள புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.

கோடி புண்ணியம் கிடைக்கும்.

நன்றி,

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com