இலங்கை – சீனா ஆகிய இருநாடுகளிடையேயான இராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனா சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் தலைமையிலான குழு மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதான அதிகாரி Chen Bingde ஆகியோருக்குமிடையான சந்திப்பின் பின்னர் இவ்ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இலங்கை அரசாங்கம் திபேத் , தாய்வான் ஆகிய நாடுகளுடனான விவகாரங்களில் சீனாவிற்கு அளித்துவந்த ஆதரவிற்கு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதான அதிகாரி Chen Bingde, நன்றியினை தெரிவித்துள்ளதோடு சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நட்பு ரீதியிலான இராணுவ பரிமாறல்களை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கமும் , இராணுவமும் சீனாவின் உதவிகளை யிட்டு மனம் நெகிழ்வதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொடர்ந்தும் இருநாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment