Tuesday, September 7, 2010

என்னை நாய் போல நினைத்து விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினர்-ஒபாமா ஆவேசம்

குடியரசுக் கட்சியினர் என்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா. மில்வாக்கியில் நடந்த தொழிலாளர் தினக் கூட்டத்தின்போது பேசுகையில் இவ்வாறு குறறம் சாட்டினார் ஒபாமா. அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா கூட்டத்தில் பேசுகையில், வாஷிங்டன் அதிகார மையத்தை நீண்ட காலமாக கோலாச்சி வந்த சில சக்திகளுக்கு (குடியரசுக் கட்சியினர்) நான் பதவிக்கு வந்தது முதலே பிடிக்கவில்லை. எனக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது.

ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர். இந்த வார்த்தையை நான் எழுதி வைத்துக் கொண்டு சொல்லவில்லை. மனதில் வந்ததை சொல்கிறேன். உண்மையும் அதுதான். மக்களை அவர்கள் மிகச் சாதாரணமாக எடை போட்டு வைத்துள்ளனர். இந்த நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். அதுகுறித்து மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நினைவிருக்காது என்ற எண்ணம் அவர்களுக்கு. அனைத்தையும் அவர்கள்தான் மாற்றி வைத்தார்கள் என நீங்கள் நினைப்பீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. அவர்களால்தான் அனைத்தும் நடந்தது என்று நீங்கள் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

ஆனால் இந்த அரசியல்வாதிகளால்தான் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார சீர்குலைவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது அதை வசதியாக மறந்து விட்டு என்னைக் குற்றம் சாட்டுவதில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கடுமையாகப் பேசினார் ஒபாமா.

அமெரிக்காவில் தெருவில் விழுந்த விமானம் -ஒருவர் பலி.

அமெரிக்காவின் தெற்கு நிவேதா நகரில் தெருவில் ஒரு குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து லாஸ் வேகாஸ் நகர போலீஸ் தலைவர் ஜான் ஷெகான் கூறுகையில், பைபர் செரோகி என்ற அந்த ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட வி்மானத்தில் 2 ஆண்களும், 2 பெண்களும் இருந்தனர். அந்த விமானம் ஹென்டர்சன் நகரில் உள்ள வீதியில் திடீரென விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்தது.

இதில் வி்மானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக தெருவில் சென்ற யாரும் இதில் சிக்கவில்லை. இது பெரும் ஆச்சரியமாக உள்ளது. பைலட் மிகத் திறமையாக விமானத்தை இறக்க முயற்சித்துள்ளார். இதன் காரணமாகவே வீடுகள் மீது விழாமல் தெருவில் விமானம் விழுந்துள்ளது என்றார்.

ஒரு வீட்டுக்குப் பின்புறம் விமானம் விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதில் விமானத்தின் வால் பகுதியைத் தவிர மற்றவை எரிந்து போய் விட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com