சர்வதேச சிறுவர் தினம் அரச சார்பற்ற நிறுவனங்களால் ஒன்றிணைந்து கொண்டாடப்படவுள்ளது.
(காரைதீவு நிருபர்) அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் முதன் முறையாக சர்வதேச சிறுவர் தினத்தை ஒன்றிணைந்து கல்முனையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேற்படி நிகழ்வானது கடந்த திங்கட்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இணைப்பாளர் எம்.எம்.சறூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 07 பொலிஸ் நிலைய சிறுவர்இ பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்களும், கல்வி திணைக்கள அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை அலகு உத்தியோகஸ்தர்கள்இ சட்ட ஆலோசனைக்குழு உயர் அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இணைப்பாளர் எம்.எம்.சறூக் அவர்கள் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 2010 சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் முதன் முறையாக சிறுவர் தொடர்பாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்ற அரச மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைத்து இருப்பது வரவேற்கக் கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான ஏற்பாட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில் ஏ.உதுமாலெப்பை ( சிறுவர் நன்நடத்தை அலகு உத்தியோகஸ்தர் - கல்முனை)எம்.ஐ.கபில் ( சீடோ – அட்டாளைச்சேனை) எஸ்.எல் தாயூடின் ( சீடோ – அட்டாளைச்சேனை)ஆர்.சுகிர்தராஜன் (வலயக்கல்வி அலுவலகம் - கல்முனை)எஸ்.முரளிடாஸ் ( மகாசக்தி அமைப்பு அக்கரைப்பற்று) கே.ஆறுமுகம் அசோகா ( மகாசக்தி அமைப்பு அக்கரைப்பற்று)ஆரிகா காரியப்பர் ( சட்ட ஆலோசகர் - NRC )என்.நிசாந்தி (HHS - அக்கரைப்பற்று )எம்.ஐ.யுனைடின் (SPACE - அக்கரைப்பற்று) எம்.ஐ. அமீன் (SPACE - அக்கரைப்பற்று) ஏ.எல்.எம்.பஸிஸ் ( நேசம் )பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
இக் குழுவின் ஒருங்கிணைப்பு செயற்பாட்டினை மனித அபிவிருத்தி தாபனத்தின்(ர்னுழு) இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.
இச் செயற்பாடுகளாக அனைத்து பாடசாலைகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு வடிவில் நடத்தப்படுவதுடன் இறுதி நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment