மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மீன்படி உபகரணங்களை ஒப்படைக்க உத்தரவு.
மன்னார் மாவட்டத்தில் கடல்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை எதிர்வரும் ஒக்டோபர் மூன்றாம் திகதிக்கு (03.10.2010) முன்னர் ஒப்படைக்குமாறு மீனவர்களை மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் சந்திரசேகரப்பிள்ளை பவாநிதி வேண்டியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 3ம் திகதி இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்பே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கூசிவலை , சுருக்குவலை , இழுவை வலை போன்றவை தடைவெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களாகும். இவ் உபகரணங்களை குறித்த காலக்கெடுவுக்கு முன்னர் தாமாகமுன்வந்து பாரமளிக்கும் மீனவர்களுக்கு மாற்று உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வுள்ளதாகவும் மாவட்ட கடற்தொழிற் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வறிவித்தலை மீறிச் செயற்படும் மீனவர்களின் உபகரணங்களை பறிமுதல் செய்ய முப்படையினரின் உதவி நாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நிருபர் எஸ். ஆர். லெம்பேட்
0 comments :
Post a Comment