Wednesday, September 8, 2010

இந்நாட்டின் ஜனநாயகத்திற்கான பிரேதப் பெட்டிக்கு இன்று இறுதி ஆணி அறையப்பட்டது.

இன்றைய அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக இந்நாட்டின் ஜனநாயகத்திற்கான பிரதேதப்பெட்டிக்குரிய இறுதி ஆணி அறையப்பட்டுள்ளது என தேசிய ஜனநயக முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளின் இடைவேளையில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் தொடர்ந்து பேசுகையில் , நான் இந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது இந்நாட்டினை கொடுமைப்படுத்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவருவேன் என மக்களுக்கு உறுதி அளித்திருந்தேன், இந்நாட்டின் ஜனநாயகம் , மக்களின் மனித உரிமைகள் , மற்றும் சகலதும் ஒரு சர்வாதிகாரியால் கட்டுப்படுத்தப்படுவதை நாம் எதிர்கின்றோம். அதே உறுதி மொழியினையே இன்றைய ஜனாதிபதியும் மக்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முறையில் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலைமைகளையிட்டு நாட்டுமக்கள் யாவரும் அதிர்சியடைந்துள்ளனர். ஏன் ஆழும்கட்சியில் உள்ளவர்கள்கூட தாம் இம்மாற்றந்களை ஏற்றுக்கொள்வதாக பசாங்கு செய்தாலும் அவர்கள் தமக்குள்ளே எம்மைபோல் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து அழுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களால் இன்றைய சர்வாதிகாரிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் நாம் எதிர்போம். எமது பூரண எதிர்பை எடுத்துக்கூறும் விதமாக பல ஆர்பாட்ங்களை நடாத்தியுள்ளளோம். தொடர்ந்தும் எதிர்ப்போம். இதற்கு எதிராக வாக்களித்தும் உள்ளோம்.

ஜனாதிபதிக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் , அவர் மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும்பொருட்டு இம்மாற்றந்களை மேற்கொள்கின்றார். இதனூடாக தனதும் தனது குடும்பத்தினதும் பலத்தை மேலும் பெருக்கமுடியுமென அவர் நினைக்கின்றார்.

இந்நிலைமைகளுக்கெதிராக நாம் தொடர்ந்தும் போரடுவோம். அதற்காக பலர் சிறைசெல்லவும் நேரிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் தற்போதும் தடுப்புக்காவலிலே உள்ளேன். ஏதுவாக இருந்தாலும் இந்நாட்டு மக்களை நாம் கீழே விழவிடமாட்டோம். அந்த கடமைக்காக எம்மில் பலர் தமது வாழ்வினை சிறையில் முடித்துக்கொள்ள தயாராகவுள்ளனர்.


No comments:

Post a Comment