Wednesday, September 15, 2010

பாரீஸ் ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க, உலகப்புகழ்பெற்ற பாரீஸ் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் வெடிகுண்டைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர் ஆனால் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது தவிர பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

இந்த மிரட்டலை போலீஸார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம் 1995ஆம் ஆண்டு இதே மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலியாயினர். 80 பேர் காயமடைந்தனர்.

மெட்ரோ நிலையத்திலும் மக்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் இது வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடிப்படைவாத, தீவிரவாத இஸ்லாமிய பிரிவினரின் விரோதத்தை சம்பாதித்துள்ளது பிரான்ஸ், இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com