Thursday, September 2, 2010

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரத்தை ஜேவிபி அரம்பித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஒருவர் இரு முறைகளே பதவி வகிக்கமுடியும் என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் யாப்பு மாற்றத்தை எதிர்த்து ஜேவிபி அதன் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை நாட்டின் சகல பாகங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. கொழும்பு நகரம் பூராகவும் ஜேவிபி யின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா தலைமையில் இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதே நேரம் இவ் அரசியல் யாப்பு மாற்றம் சட்டவிரோமானது எனவும் பாரளுமன்றில் 2ஃ3 பெரும்பாண்மையை பெற்றுக்கொண்டாலும் மக்களின் விருப்பை பெற்றுக்கொள்ளும்பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவேண்டுமென நீதிமன்று உத்தரவிடவேண்டுமென வேண்டி ஜேவிபி யினர் உச்ச நீதிமன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment