இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கேட்கிறது அமெரிக்கா
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கோரிக்கையை அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் மூன்று தினங்களுக்கு முன் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அந்த அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் இருநாட்டு தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment