அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. உச்ச நீதிமன்று.
அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிராக ஜேவிபி உச்சநீதிமன்றில் வழக்கு பதிவு செய்திருந்தது. அவ்வழக்கில் யாப்பில் மாற்றம் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு மக்களின் ஆணையை பெறவேண்டும் என வேண்டப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பினை உச்ச நீதிமன்று அறிவித்துள்ளதாகவும் , அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும் பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையின் அங்கீகாரத்துடன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment