மீள்குடியேற்ற விவகாரம் திருப்தி தரவில்லை. மீண்டுமோர் கிளர்ச்சி தோன்றலாம்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதில் அரசின் கவனம் போதாது எனவும் இதனால் நாடு மீண்டுமோர் கிளர்ச்சிக்கு முகம்கொடுக்க நேரிடலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பிரத்தியேக விஜயம் ஒன்று தொடர்பாக பிரித்தானியாவில் தங்கியுள்ள திரு. அத்தநாயக்க இலங்கைநெற் இற்கு அளித்த செவ்வியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் உட்பூசல் தொடர்பாக கேட்டபோது, ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் அழித்து விடமுடியாது. இது அரசின் தற்காலிக எத்த னிப்பு . இதே முயற்சியை 1956 இல் எஸ் ஆர்.டபிள்யூ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தபோது கட்சி முற்றிலும் அழிந்துபோகும் வெளித்தோற்றமே காணப்பட்டது. ஆனால் நாம் 1970 ல் மீண்டும் பலம்பெற்று ஆட்சியை கைப்பற்றினோம். இவ்வாறான நிலைகள் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் லங்கா சமசமாஜ கட்சிக்கும் கொமுனீசக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 1978 பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா அம்மையார் , அனுர பண்டாரநாயவினால்கூட ஒன்றபட்டு செயல்படமுடியாது உடைந்து போனார்கள். ஏன் ஜேவிபி யை எடுத்துப்பாருங்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட மாறுபட்ட கொள்கையுடன் இடதுசாரி போக்கினை கொண்டவர்கள். இவர்களுடனிருந்த விமல்வீரவன்ச போன்றோருர் பிரிந்து சென்று அரசுடன் இணைந்தன் ஊடாக அவர்களுக்கும் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தது, எனவே இது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியவை அல்ல. அந்தவகையில் ஐக்கிய தேசியக்கட்சி அந்த யதார்த்தத்திற்கு தற்போது முகம் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
செவ்வியின் முழுவடிவம் நாளை வெளிவரும் .
0 comments :
Post a Comment