Friday, September 17, 2010

கறடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் பாரிய வெடி விபத்து. 60 பேர் பலி. (இணைப்பு 2)

மட்டக்களப்பு கரடியனாறில் இன்று காலை பாரிய வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றிப்பதாக தெரிவிக்கும் இராணுப் பேச்சாளர். அப்பிரதேச்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைகளுக்கு தேவையான வெடிபொருட்கள் கறடியனாறு பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தாகவும், சீன நிறுவனம் ஒன்றுக்கு தேவயான வெடிபொருட்களை அந்நிறுவனத்தின் சீனப்பிரஜைகளான இருவர் எடுத்துச் செல்லும்போது இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வெடிப்புச் சம்பவம் பொலிஸ் நிலையத்தினுள்ளளேயே இடம்பெற்றபோது அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வெடிபொருள் கொள்கலன்களும் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் பொலிஸ் நிலையத்திலிருந்த சுமார் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகின்றோம் அத்துடன் வெடிபொருட்களை எடுத்துச் செல்லவந்திருந்த சீனப்பிரஜைகள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அனுமானிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்பினால் பொலிஸ் நிலையம் முற்றாக நிர்மூலமாகியுள்ளதுடன் அண்மையில் உள்ள குடிமனைகள் கட்டிடங்களும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குண்டுவெடிப்பில் 100 மேற்பட்டோர் காய மடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே நேரம் 9 பேர் மட்டக்களப்பு ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அத்துடன் கவலைக்கிடமான நிலை யில் 4 பேர் கொழும்பு தேசிய வைத் திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com