பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவனின் மரணம் தொடர்பில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகமை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் சேர்த்து 4 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறுது.
பேருவளைப் பகுதியில் நேற்று பொலிஸாருக்கும் கொள்ளைக்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது 8 வயதுச் சிறுவன் உயிரிழந்தார். மஹரகம பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை தேடிச்சென்ற வேளையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான சுதுல் நிலுபுல் என்ற சிறுவன் பேருவளை மொரகல்லை பகுதிச் சேர்ந்தவராவார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment