ஜெனரல் பொன்சேகாவிற்கு 3 வருட சிறைத்தண்டனை.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேவிற்கு இராணுவ குற்றவியல் நீதிமன்றம் இன்று 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரங்களுக்கான குழுவின் தலைவராக பதவிவகிக்கும்போது அதன் கட்டுப்பாடுகளை மீறியதாக இவர்மீது குற்றச்சுமத்தப்பட்டது. இக்குற்றச்சாட்டினை விசாரணைசெய்த இரண்டாவது இராணுவக் குற்றவியல் குற்றவியல் நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன் இக்குற்றத்திற்கு 3 சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக கேள்விப் பத்திரக் குழுவின் அங்கத்தவராக இருந்த மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய சாட்சியமளிக்கவிருந்த நிலையில் அவர் சாட்சியமளிப்பதை தவிர்த்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரின் சாட்சியங்கள் இல்லாமல் விசாரணைகளைத் தொடர்ந்த நீதிமன்று இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இவருக்கான சிறைத் தண்டனை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அனுமதி கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின்போது அவரது இராணுவப் பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டு அவருக்கான ஓய்வூதியமும் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment