ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தான் இராணுவத் தளபதியாக சேவை செய்தகாலத்தில் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் 200 கிலோகிராம் தங்கம் மீட்டகப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளார். அத்துடன் தான் இராணுவத் தளபதி என்ற பதிவியிலிருந்து விலகிய பின்னரும் அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது பெரும்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் , கேபி யூடாக மேலும் பல சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை. அண்மையில் கே.பி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தானும் பாதுகாப்புச் செயலரும் ஒரேவிதமான சிந்தனைகளை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.பி யின் இக்கருத்தினூடாக நாம் பல விடயங்களை உணர்ந்து கொள்ள முடியும். கே.பி இவ்வாறான கருத்துக்களை போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது தெரிவித்திருந்தால் , 5000 படைவீரர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கமுடியும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அத்துடன் போர் காலத்தில் எமக்கு உதவிய கருணா , பிள்ளையான் போன்றோர் ஓதுக்கப்பட்டு இன்று கே.பி க்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியிருக்கவில்லை. அரசியல் யாப்பின் 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில் வாக்கெடுப்பு இன்றி அவசரகாலச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment