டேவிட் கிங்கின், 1917 முதல் ஜோசப் ஸ்ராலின் மரணம் வரையிலான சோவியத் ஒன்றியத்தின் ஒரு புகைப்பட வரலாறு. By Adelbert Reif
அடெல்பெர்ட் ரெய்ஃப்பின் அனுமதியுடன், Red Star over Russia புத்தகத்தின் ஒரு மதிப்பாய்வை இங்கே நாங்கள் பதிப்பிக்கிறோம். இது ஜேர்மன் இதழ் Universitasஇல் இம்மாத புகைப்படமாக பெயரிடப்பட்டது. இதன் மதிப்பாய்வு ஆகஸ்ட் இதழில் வெளியிடப்பட்டிருந்தது.
டேவிட் கிங்கின் Red Star Over Russia உண்மையிலேயே ஓர் அற்புதமான புகைப்பட புத்தகம் என்று கூறினால் அது மிகையாகாது! மூன்றரை தசாப்த கால சோவியத் ஒன்றியத்தின் வரலாறு—அதன் தொடக்கத்திலிருந்து ஸ்ராலினின் மரணம் வரையில்—இதுவரை ஒருபோதும் அளிக்கப்பட்டிருக்காத அளவிற்கு இந்த புத்தகத்தில் கலைநயத்துடன் புகைப்பட தொகுப்புகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்த பின்னரும், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆரம்பகால ஒருசில தொடர்ச்சியான சோவியத் ஆவணத்தொகுப்புகளுக்குப் பின்னரும், சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்து பல புகைப்படத்தொகுப்பு புத்தகங்கள் (photo books) வெளியாகி இருக்கின்றன. இதில் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருப்பது, பீட்டர் ரடெட்ஸ்கியால் (Peter Radetsky) பிரசுரிக்கப்பட்ட Russia and the Soviet Union (2007) என்பதாகும். முக்கியமாக இதில் அவர், ரஷ்யா மற்றும் சோவியத் வரலாறின் ஒரு நூற்றாண்டை எடுத்துக்காட்ட TASS அரசு செய்தி நிறுவனத்தின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இருந்தார்.
இவற்றில் பெரும்பாலும் எதுவுமே டேவிட் கிங் அளித்திருக்கும் அளவிற்கு வரலாற்று ஆவணங்களின் பிரத்யேகதன்மைகளையும், பரந்த நோக்கத்தையும் ஆவணப்படுத்தி தொகுக்கப்பட்டவையாக இல்லை. இதற்கான காரணத்தை அந்த ஆசிரியரின் தனிப்பட்ட வளர்ச்சியில் காண முடிகிறது. The Commissar Vanishes, The Falsification of Photographs and Art in Stalin’s Russia, The Victims of Stalin (2003) ஆகியவற்றுடன் சோவியத் ஒன்றியம் குறித்து ஏனைய பல புத்தகங்களையும் எழுதியுள்ள எழுத்தாளர் கிங், 1965 முதல் 1975 வரை இலண்டன் Sunday Timesஇன் கலாச்சாரத்துறைக்குத் தலைமையேற்று இருந்தார். ரஷ்ய புரட்சிகர கலையைக் குறித்த அவருடைய தனிப்பட்ட சேகரிப்புகளில் சுமார் 250,000 பொருட்கள்—அதாவது, முக்கியமாக சுவரொட்டிகள், செய்தியிதழ்கள், துண்டறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை—உள்ளடங்கும் என்பதுடன் இவை உலகின் மிக விலைமதிப்பற்ற மற்றும் முக்கியமானவைகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த தொகுப்பில், கிங்கின் சுருக்கமான வரலாற்று-அரசியல் கருத்துக்களுடன் (இப்போது வரையில், அந்த கருத்துக்கள் விளங்க வைக்கப்பட்டிருக்கும் திறனில் முற்றிலும் நினைத்துப் பார்க்க கூடியவையாக உள்ளன) 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உயர்ந்த தரத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் பலவற்றை இதில் தான் முதல்முறையாக பார்க்க முடிகிறது—காலகிரயத்தில் புகைப்படங்களை அடுக்கி வெளியிட்டமைக்காக அவருக்கு நன்றி—மேலும் எந்தவொரு முந்தைய வரலாற்று புத்தகமும் கிங்கின் தொகுதி காட்டியிருப்பது போல, 1917 முதல் 1953 ஆண்டுகள் வரையிலான அதிரடியான நிகழ்வுகளை இந்தளவிற்கு நேரடியாகவும், நேர்மையாகவும் உயர்த்திக் காட்டியிருக்கவில்லை.
இன்னுமொரு ஆக்கப்பூர்வமான கூறுபாட்டையும் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்ராலின் ஆட்சியின் போதிருந்த குலாங்குகளில் (Gulags) உயிரிழந்த அல்லது கொல்லப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் பல சோவியத் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களின் கைவிடப்பட்ட படைப்புகளை மறுஆக்கம் செய்திருப்பதன் மூலமாக, அவற்றை கிங் காப்பாற்றி இருக்கிறார்.
பாரம்பரிய வார்த்தைகள் அளிக்கும் "அற்புதமான" ஒரு வாசிப்பு அனுபவத்தை இப்புத்தகத்தால் அளிக்க முடியாது என்பதை கிங் முற்றிலும் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்பது உண்மையே. அவருடைய அறிமுக உரையில் அவர் எழுதுகையில், “இதன் வழியாக செல்வது அவ்வளவு எளிதல்ல என்று வாசகர் எச்சரிக்கப்படுகிறார். இந்த பக்கங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் நான்கு தசாப்தங்களில், மூன்று யுத்தங்கள், இரண்டு பஞ்சங்கள் மற்றும் ஒரு சர்வாதிபத்திய சர்வாதிகாரம் ஆகியவற்றின் விளைவுகளால் மில்லியன்கணக்கான ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டார்கள். லெனின் மரணத்திற்குப் பின்னர், ஸ்ராலின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதைக் கொண்டு சாதாரண குடிமக்களின் வாழ்க்கை அவரால் சின்னாபின்னமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, ஓர் உயர்மட்ட கம்யூனிஸ்ட்டை கைது நடவடிக்கைகள், விசாரணைகள், சித்திரவதைகள் போன்ற கொடுமைகளுக்குள் உள்ளாக்கினார்—அதைத் தொடர்ந்து குலாங்கில் அல்லது துப்பாக்கிப் படையின் முன்னிலையில் பல கொடூரமான ஆண்டுகள் கடந்தன.” துல்லியமாக, இந்த சூழ்நிலைகளைத் தான் தம்முடைய வாசகர்கள் அவர்களுக்குள்ளாக கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்று கிங் விரும்புகிறார்.
ஒரு புகைப்பட புத்தகத்திற்குத் தேவையான அனைத்து தகுதிகளுடன் இந்த தொகுதி தொடங்குகிறது. 1900இல் இருந்து தொடங்கும் ஒரு புகைப்படத்தில் 澱arge haulers” அல்லது 天olga boatmen” என்றழைக்கப்பட்ட நைந்துபோன மக்கள், வோல்கா ஆற்றங்கரையோரம் நீண்ட பெரிய கயிறுகளால் ஆற்றிலிருந்து கப்பல்களை இழுக்கும் வேலையைச் செய்கிறார்கள்; அதேநேரத்தில் நேரடியாக அதைத் தொடர்ந்து வரும் புகைப்படங்களில், 1909இல் இரண்டாம் ஜார் நிகோலஸூம், ஜாரினா அலெக்சாண்டர் பியோடொரொவ்னாவும் அவர்களுடைய இரண்டு மூத்த மகள்கள் ஓல்கா மற்றும் தாட்ஜானாவுடன் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. கண்களைக் கசக்கும் இந்த சமூக முரண்பாடு ரஷ்யாவில்—அப்போது ஐரோப்பாவில் இது பெரும்பான்மை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது—வரவிருக்கும் புரட்சியை, உலகத்தையே உலுக்கவிருக்கும் ஒரு மாபெரும் எழுச்சியை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இங்கே, சோவியத் வரலாறின் பிந்தைய தசாப்தங்களின் "படக்காட்சி" மூலமாக அவருடைய முக்கிய கருவுருவைக் கொண்டு வர, 1917 பெப்ரவரி புரட்சி மற்றும் அக்டோபர் புரட்சி ஆகிய இரண்டையும் கொண்டு, முழு சக்தியைச் செலவிட்டுள்ளார்.
புரட்சிகர நாட்களின் புகைப்படத் தொகுப்பு என்பதால் மட்டும், இதுபோன்றதொரு மிகப் பலமான தாக்கம் உருவாகவில்லை. பல்வேறு செய்தியிதழ்களின் தலைப்பு பக்கங்கள், ஜோன் ரீட்டின் Ten Days That Shook the Worldஇல் இருக்கும் புத்தக மேலட்டைகள் மற்றும் ஒரு புரட்சிகர முற்போக்கு சிந்தனையாளர்கள் சங்கத்தின் பாத்திரத்தை அகழ்தெடுக்கும் புரட்சிகர எழுச்சிகளின் கலைத்துவ வடிவங்களை வெளிக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக கிங் நமக்கு கலைத்துவமான ஆதாரங்களையும் அளிக்கிறார்.
இதற்கும் கூடுதலாக, வெற்றிபெற்ற போல்ஷ்விக்குகளுக்கு அவர்களின் தலைவர்களின் நகலோவியங்களை (photographic portraits) உருவாக்குவது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறிருந்த 1918இல், பிரபல நகலொவிய நிபுணர் மோசெய் நப்பெல்பௌம் (Mosei Nappelbaum) அவர்களுக்காக லெனினின் மிக பிரபலமான ஓவியங்களில் ஒன்றை உருவாக்கினார். பின்னர் இதன் மில்லியன்கணக்கான நகல்கள் செய்யப்பட்டன. (1919இல் கிரெம்ளினில் எடுக்கப்பட்ட லெனினின் மற்றொரு நினைவில் இருத்தக்கூடிய ஓவியம், விக்டர் புல்லாஸிடமிருந்து வந்தது.) லெனின் புகைப்படங்களுக்கு அப்பாற்பட்டு, 1918 நவம்பரில் "Leaders of the Proletarian Revolution” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புகைப்படத் தொகுப்பையும் நப்பெல்பௌம் செய்தார். இதில் லெனின், ஜினோவெவ், லூனார்சார்ஸ்க்கி, டிரொட்ஸ்கி, கேமெனெவ் மற்றும் ஸ்வெர்ட்லொவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர் 1919இல், உள்நாட்டு யுத்தத்தின் போது தம்முடைய முழு சக்தியின் உச்சத்திலிருந்த செம்படையின் ஸ்தாபகரும், தலைவருமான டிரொட்ஸ்கியின் ஓர் அற்புதமான ஓவியத்தை அவர் உருவாக்கினார். ஒரு பெயர் அறியப்படாத கலைஞரால் தீட்டப்பட்ட 1920க்கு பிந்தைய ஓர் அரிய கூம்புவடிவ-கற்பனை ஓவியம் உட்பட, டிரொட்ஸ்கியின் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலிருந்து அவரைப் பற்றிய பல சுவாரசியமான வரலாற்று புகைப்படங்களையும் கிங் அளிக்கிறார். 1920களின் இறுதியிலிருந்து—லெனின் 1924இல் இறந்தார், படிப்படியாக, ஸ்ராலினைச் சுற்றியிருந்த குழுவால் டிரொட்ஸ்கியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன—டிரொட்ஸ்கியுடன் அல்லது "மக்களின் எதிரிகள்" என்றழைக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய எந்த விஷயமும் கைது நடவடிக்கையை, குலாங்கை அல்லது மரண தண்டனையையே குறித்தது.
டேவிட் கிங் அவருடைய பணியின் கணிசமான பகுதியைச் சோவியத் ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் கல்வித்துறை நிறுவனங்களுக்கு அர்பணிக்கிறார். இந்த விஷயத்தில் அனாடொலி லூனாசார்ஸ்க்கி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். அவரும் அவர் மனைவியும் (பேசா பட நட்சித்திரம் நடாலியா ரோசேனெல்) சேர்ந்திருக்கும், 1920களின் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் கிங் இதில் அளிக்கிறார். “நன்கு படிப்பறிவு பெற்ற, தீவிரத்தன்மை கொண்ட சமுதாய சூழலில் இருந்து லூனாசார்ஸ்க்கி வந்தார். மேலும் அவருடைய வித்தியாசமான பெரும் திறமைகள் அவரை புரட்சியின் மையத்தில் கொண்டு சென்று நிறுத்தியது・ என்று கிங் விளக்குகிறார்.
1917 நவம்பரில், கல்வித்துறையின் மற்றும் அறிவொளியின் முதல் கமிஷனராக லெனின் ஆவார் என்பதாக தெரிந்தது. ரஷ்யாவின் பரந்த எழுத்தறிவின்மைக்கு எதிராக ஒரு தீவிர பிரச்சாரத்தைத் திருப்பிவிட லூனாசார்ஸ்க்கி அவருடைய பதவியை முறையாக பயன்படுத்தினார். அவர் கல்விமுறையைச் சீர்திருத்தினார்; கற்பிற்கும் முறைகளை நவீனப்படுத்தியதுடன், வெகுஜன மக்களிடையே இசை, நாடகம், இலக்கியம், படக்கலைகள் ஆகியவற்றில் ஆர்வங்களை வளர்க்க ஊக்கப்படுத்தினார். 1929இல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது, போதிய வயதடைந்திருந்த ஒவ்வொருவரும் படிக்க, எழுத, கணக்கிடத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
பல்வேறு துறைகளில் கலையையும், வடிவமைப்பையும் ஒருங்கிணைப்பதற்கான யோசனையையும் லூனாசார்ஸ்க்கி ஊக்கப்படுத்தினார். எல் லிஸ்ஸிட்ஸ்கி, ஜூபோவ் பொபோவா, அலெக்சாண்டர் ரோட்சென்கோ, வார்வரா ஸ்டெபனோவா, விளாடிமீர் டாட்லின் மற்றும் அலெக்சாண்டர் வெஸ்னென் ஆகியோர் முற்போக்கு படைப்பாளிகளின் மத்தியில் முன்னனியில் இருந்த கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆவார்கள். இவர்கள் 1920களில் குறிப்பாக உயர்கலை மற்றும் தொழில்நுட்பத்திற்காகவே உருவாக்கப்பட்டதும், Vkhutemas என்ற பெயரில் அறியப்பட்டதுமான மாஸ்கோவிலிருந்த உயர்கலை மற்றும் தொழில்நுட்ப கலைக்கூடத்தில் படிப்பிக்கப்பட்டவர்கள். எவ்வாறிருப்பினும், முற்போக்கு படைப்பாளிகளின் இந்த முதலிட பரிசோதனைரீதியிலான கலைஞர்களும், எழுத்தாளர்களும் "சமுதாய யதார்த்தவாதம்" (social realism) என்றழைக்கப்பட்டதன் பிரதிநிதிகளால் விரைவிலேயே தொடர்ந்து விரோதமாக கருதப்பட்டார்கள். அத்துடன் 1930இல் Vkhutemas மூடப்பட்டது. முற்போக்கு படைப்பாளிகளில் இடம்பெற்றிருந்த பல சோவியத் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் போலவே, கலாச்சாரப் பிரச்சினைகள் என்று வந்த போது, லூனாசார்ஸ்க்கியும் அடிக்கடி குறுகிய-மனம் படைத்த போல்ஷ்விக்குகளுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டி இருந்தது. 1933இல் கடுமையான இதய கோளாறால் அவர் மரணமடைந்தார். வெகு விரைவிலேயே அதன்பின்னர் தொடங்கப்பட்ட ஸ்ராலினிய கொடூர நடவடிக்கைகளுக்கு ஆளாவதிலிருந்து அவருடைய தலைவிதி சந்தேகத்திற்கிடமின்றி அவரைக் காப்பாற்றியது.
இந்த கொடூரங்களை ஆவணப்படுத்துவதில் டேவிட் கிங் அவருடைய புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை ஒதுக்கியுள்ளார். இந்த தொகுதியின் தொடக்கத்தில், “The Butcher” என்ற தலைப்பில், ஸ்ராலினின் உள்ளதுஉள்ளபடியான ஒரு புகைப்படத்தை ஒருவர் பார்க்கலாம். இதைத் தொடர்ந்து, உஜ்பெக்கின் கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் புகைப்படங்களையும் மற்றும் (1930களின் தொடக்கத்தில்) பால்டிக் கடலையும், வெள்ளை கடலையும் இணைக்கும் திட்டமாக இருந்த ஸ்ராலின் பெலோமோர் கால்வாய் (Stalin Belomor Canal) கட்டமைப்பின் போது, பூஜ்ஜியத்திற்கும் கீழே இருந்த வெப்பநிலையில் வேலை செய்யும் தொழில் அடிமைகளின் ஒரு துருப்பையும் காணலாம்.
இந்த கால்வாயைக் கட்டும் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். இது ஸ்ராலினால் பிரத்யேகமாக திறந்துவைக்கப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாமலேயே போனது. 1930களில் இரகசிய போலிஸால் அமைக்கப்பட்ட ஒரு குழந்தைகள் காப்பகத்தில், "சோசலிச தாய்நாட்டு துரோகிகளின் குழந்தைகளைக்" காட்டும் போலிஸ் புகைப்படங்களின் ஒரு பக்கம், குறிப்பாக ஒரு சோக நிகழ்வை ஆவணப்படுத்துகிறது: தங்கள் பெற்றோரைக் குற்றஞ்சாட்ட (அவர்கள் உயிரோடு இல்லையென்றாலும் கூட) அவர்களுடைய ஆசிரியர்களால் இந்த குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பகால சோவியத் வரலாறின் அந்த காலக்கட்டத்திலிருந்த ஒட்டுமொத்த முரண்பாடுகளையும் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக, கலைத்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட முழு-வண்ண பிரச்சார சுவரொட்டிகளின் அப்போதைய முழக்கங்களை—சோவியத்・ ஒன்றியம் சர்வதேச சோசலிசத்தின் மையத்தில் இருக்கிறது", “சோவியத் அதிகாரமும், மின்வேக இயக்கமுமே கம்யூனிசம்" அல்லது "நம்முடைய மகிழ்ச்சியான சோசலிச நாடு வாழ்க! நம்முடைய அன்புக்குரிய, தலைச்சிறந்த தலைவர் ஸ்ராலின் வாழ்க!” என்பன போன்ற முழக்கங்களை—கிங் தொடர்ந்து உள்ளே நுழைக்கிறார். இவ்வாறு சோவியத் சோசலிச சர்ரியலிசத்தின் (Soviet socialist surrealism) இணை உலகை அடிக்கடி படம்பிடித்துக் காட்டுகிறார்.
1920களில் பேரழிவுமிக்க பஞ்ச அவலத்தையும், குலக்குகளைத் (kulaks) தூக்கிலிடுதலையும் சித்தரித்துக்காட்டும் புகைப்படங்களுக்கும் கூடுதலாக, 1936, 1937, 1938இல் மாஸ்கோவில்—இரகசிய போலிஸால்—குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களின் வழக்குகள் உட்பட, ஸ்ராலினிய கொடூரங்களின் மிக நாசகரமான எடுத்துக்காட்டுகளுக்கும் இதிலிருக்கும் படங்கள் ஆதாரமளிக்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான படங்களை முதன்முறையாக பார்க்க முடிகிறது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை முறுக்கி, முற்றிலும் முட்டாள்தனமான, பகுத்தறிவிற்குப் பொருந்தாத வாக்குமூலங்களை அவர்களிடமிருந்து பெறுவதற்கு முன்னால், பாதிக்கப்பட்ட அவர்கள் சித்திரவதையால் படும் வேதனையின் அறிகுறிகளை முகங்கள் தெளிவாக காட்டுகின்றன. 1936 ஆகஸ்டில் நடந்த முதல் வழக்கில் (“டிரொட்ஸ்கி-ஜினோவெவ் பயங்கரவாத கரு・ என்று நன்கு அறியப்பட்ட வழக்கு) முதன்மை குற்றவாளியாக நிறுத்தப்பட்ட க்ரீகோரி ஜினோவெவ் போன்றவர்களின் முகங்கள் தெளிவாக தெரிகின்றன. இந்த முகங்கள் சிலநேரங்களில் கொடூரத்தன்மையையும், சிலநேரங்களில் சந்தேகத்தன்மையையும், ஆனால் சிலநேரங்களில் ஸ்ராலின் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி பார்க்கும் பார்வையையும் கூட வெளிப்படுத்துகின்றன. ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு இருந்தார்கள்.
ஸ்ராலினால் நடத்தப்பட்ட நான்காவது வழக்கு, இந்த முறை சோவியத் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் எதிராக நடத்தப்பட்டதாக கருதப்பட்டது. “சமுதாய யதார்த்தவாதத்துடன்" தம்மைத்தாமே இணைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்ததற்காக, 1936 ஜூனில் விசெவொலொட் மெயர்ஹோல்டு (Vsevolod Meyerhold) கைது செய்யப்பட்டார். கிங்கால் அளிக்கப்பட்டிருக்கும் மெயர்ஹோல்டின் போலிஸ் புகைப்படமும் கூட காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த சித்திரவதை, மிகச் சிறந்த நாடக இயக்குனரால் மெலோடோவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் மிக துல்லியமாக விளக்கப்பட்டது. அதுவும் கூட இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது. மெயர்ஹோல்டு கைது செய்யப்பட்ட ஒருவாரத்திற்குப் பின்னர், அவரது மனைவியான நடிகை சினாய்டா ரெய்ச் கொலை செய்யப்பட்டார். மெயர்ஹோல்டும் 1940 பெப்ரவரி 2இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பல தசாப்தங்களாக சைபீரிய ஆவணக்கிடங்கில் கிடந்த புகைப்படங்கள், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் ஜனநாயக இரகசிய சேவைப்பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. “ஒரு சிறப்பு இரயிலில் அவை மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டு, மீண்டும் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டது என்ற உண்மையிலிருந்து—இந்த புகைப்பட தொகுப்பைத் தொகுப்பதற்காக—அவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்பதை அளவிட முடியும்・ என்று கிங் எழுதுகிறார்.
1941 ஜூன் 22இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஹிட்லரின் தாக்குதலுடன், இந்த பரந்த நாட்டின் வரலாற்றில் மற்றொரு இரத்தந்தோய்ந்த காலக்கட்டம் தொடங்கியது. யுத்தத்திற்குத் தேவையான மக்களைத் திரட்ட வடிவமைக்கப்பட்ட அப்போதைய பல சுவரொட்டிகளுடன், “தந்தைநாட்டின் மிகப் பெரிய யுத்தம்" என்பதிலிருந்து கிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள், 18 மில்லியன் ரஷ்யர்களின் மரணத்துடன் (சில மதிப்பீடுகள் இதை 24 மில்லியனாக குறிப்பிடுகின்றன) முடிவுக்கு வந்த ஒரு கொடூர சம்பவத்தை ஆவணப்படுத்துகிறது. கிங் எழுதுகிறார்: “தொழில்துறை மற்றும் விவசாயத்தின் மறுகட்டமைப்பு நாட்டில் மிக பரந்த தேவையைத் தோற்றுவித்தது. சோவியத்தின் உள்கட்டமைப்பு நாசமான நிலையில் இருக்கிறது. 1700க்கும் மேலான நகரங்கள்/பெருநகரங்கள், அத்துடன் 65,000 கிலோமீட்டர் இரயில்பாதை, மருத்துவமனைகள், பாடசாலைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என்று நாஜிகள் முற்றிலுமாக அழித்திருந்தார்கள். ஒவ்வொன்றையும் புதிதாக உருவாக்க வேண்டி இருந்தது.” 1953இல் ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னரும் கூட, ரஷ்யா பலவந்தமாக எதிர்கொண்ட கொடூரங்களில் இருந்து தன்னைத்தானே மெதுவாக மீட்டெடுக்க தொடங்குவதற்கு முன்னர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கால அவகாசம் தேவைப்பட்டது.
கிங்கின் சோவியத் ஒன்றிய "புகைப்பட" வரலாறிலிருந்து சில முக்கிய விபரங்கள் குறைவதாக சில வாசகர்கள் நிச்சயமாக வருந்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சோவியத் கலையின் சினிமாத்துவ பக்கத்தை ஆசிரியர் பெரும்பாலும் முற்றிலுமாக விட்டுவிட்டார் என்பதே இதற்கு போதுமானது. ஆனால் இதில் நின்றுவிடாமல், RedStar Over Russia அதன் படங்கள் மற்றும் எழுத்துக்களின் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் (நடெஜ்டா மென்டெல்ஸ்டம் குறிப்பிட்டது போல, “ஓநாய்களின் நூற்றாண்டில்・ அல்லது கண்ணீரின்・ நூற்றாண்டில்・) ரஷ்ய-சோவியத் வரலாறின் ஒரு முக்கிய பகுதியின் ஒப்பற்ற தோற்றப்பாட்டை அளிக்கிறது.
பதிப்புரிமை: அடெல்பெர்ட் ரெய்ப் மற்றும் Universitas இதழ். வெளியீடு: ஸ்டுட்கார்டின் எஸ். ஹெர்ஜெல் (http://www.hirzel.de/universitas/)
0 comments :
Post a Comment