Wednesday, September 8, 2010

18ம் திருத்தச்சட்டம் 2/3 பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் இருதடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி ஒருவர் போட்டியிடமுடியாது என்ற வரையறை அரசியல் யாப்பின் 18 திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கிய திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 161 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆழும் கட்சியின் பக்கம் தாவி 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்ளித்துள்ளர். லக்ஸ்மன் செனவிரத்தன , ஏர்ல் குணசேகர , அப்துல் காதர் , உபெக்ஷா சுவர்ணமாலி , நிமால் விஜெசிங்க , மனுஷா நாணயக்கார ஆகியோரே இன்று ஆழும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டவர்களாகும்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரேலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மின்னல் சிறிறங்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பா.உ பி.பியசேன ஆகியோர் எதிர்கட்சியில் இருந்தவாறு அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளதுடன் இது தொடர்பான எவ்வித விவாதங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment