Friday, August 13, 2010

MV Sun Sea கப்பல் 490 இலங்கை அகதிகளுடன் கனடாவை அடைந்துள்ளது.

ஆசிய நாடொன்றிலிருந்து இலங்கை அகதிகளுடன் கனடாநோக்கி புறப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் பேசப்பட்டுவந்த எம்வி சண் சீ எனும் கப்பல் இன்று கனடாவின் மேற்கு கடற்பரப்பை அடைந்துள்ளதுடன் கப்பலிலிருந்த சுமார் 490 அகதிகளை கனடிய கடற்படையினர் மீட்டுள்ளதாக ஏஎஃபி நிறுவனம் தெரிவிக்கின்றது.

வன்கூவரை அடைந்த இக்கப்பலில் இருந்தோர் கெலிகொப்படர்கள் மூலம் மீட்டகப்பட்டு கடற்படை தளம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கறுப்பு கண்ணாடிகளை கொண்ட பஸ்வண்சடிகளில் தடுப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நீண்டநாள் பயணத்தில் நோய்வாய்ப்பட்டிருக்க கூடியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென விசேட வார்ட் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 90 நாட்கள் பயணம் மேற்கொண்டுவரும் குறிப்பிட்ட கப்பலில் புலிகளியக்க உறுப்பினர்கள் இருக்ககூடும் என கனடிய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com