டக்ளஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
1986 ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் மற்றும் சிறுவன் ஒருவனை கடத்தி கப்பம் பெற்றமை தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டவுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தப்பி ஓடிவந்தார்.
அவர் மீதான வழக்கு இந்தியாவில் நிலுவையிலுள்ள நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இந்தியா சென்றிருந்தபோது அவரை கைது செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் இந்திய உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்று இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வஜிரவேலு தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின் படி, தமிழ் ஆயுதக்குழுவினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது என்பது டக்ளஸ் தேவானந்தா வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டத்துடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களுக்கே குறிப்பிட்ட பொது மன்னிப்பு செல்லுபடியாகும் எனவும் தனிநபர்களை பணத்திற்காக கடத்திய சமூகவிரோத செயல்களுக்கு இப்பொது மன்னிப்பு உருத்துடையதா என்பது கேள்வி.
0 comments :
Post a Comment