Sunday, August 8, 2010

நெடுங்கால சிறைத்தண்டனை அனுபவிப்போருக்கு திறந்தவெளி முகாம்கள்.

சிறைச்சாலைகளில் நெடுங்காலமாக சிறைத்தண்டனை அனுபவிப்போரை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனருத்தாரண அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறான திறந்த வெளிமுகாம்களில் பெருவாரியாக பண்ணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவற்றில் கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இப்பண்ணைகளில் உ ற்பத்தி செய்யப்படவுள்ள நெல் , மரக்கறி வகைகள் , கோழிகள் , மாடுகள் என்பன ஏனைய சிறைச்சாலைகளின் உணவிற்கு பயன்படும் எனவும் இவ்வாறாதோர் வேலைத்திட்டம் பொலநறுவை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment