ஜேவிபி எம்பி க்கள் இருவர் கைது.
இராணுவத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவை விடுவி என இன்று காலியில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் காலி பொலிஸ் நிலையத்தை அடைந்தபோது பொலிஸார் ர ப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர். அப்போது ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸார்மீது கற்களை வீசி எ றிந்துள்ளனர். கற்களை வீசி எறிந்த ஆர்பாட்டக்காரர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமது ஆதரவாளர்கள் இ ருவரையும் மீட்கச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித கேரத் , அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளீன் கேவகே ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கைது தொடர்பாக கருத்துரைத்த தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்
கி ங்ஸ்லி எக்கநாயக்க , பொலிஸார் மீது கற்களை வீசிய இருவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தொடர்பாக சமாதானம் பே சவந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் விவாதம் முற்றியபோது அவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியை தாக்கியபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment