Friday, August 6, 2010

மங்கள ஐ.தே.கட்சியில் இணைவு. ஸ்ரீ.ல.சு. கட்சியில் ஜனநாயகம் இல்லையாம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் முன்னணி) என்ற அரசியல் கட்சி ஒன்றை நிறுவியிருந்த மங்கள சமரவீர இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவருக்கான அங்கத்துவ பத்திரத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் தவைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையகமான சிறிக்கொத்வில் வைத்து வழங்கி வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேசுகையில் நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தினையும் , அக்கட்சிக்கான மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியினையும் பெற்றுக்கொண்டது அன்று அக்கட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளாகும். 1951 ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்க அவர்கள் தனது புதிய கட்சி மக்கள் ஜனநாயக கட்சி எனவும் தமது கட்சி எக்கால கட்டத்திலும் ஒரு தனி நபருக்கோ அன்றில் குழவொன்றுக்கோ தங்கள் சுயநலங்களை பூர்த்தி செய்வதற்கு துணைநிற்காது எனவும் தெரிவித்திருந்தார், ஆனால் இன்று அவருடைய அந்த புனிதமான நோக்கத்தை ராஜபக்ச குடும்பத்தினர் தலைகீழாக மாற்றியுள்ளனர். இன்று இக்கட்சியினர் மக்களது ஜனநயக உரிமைகள் யாவற்றையும் பறித்து சர்வாதிகார போக்கில் செல்வதை இங்குள்ள நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்ற அவர் இன்று நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு ஐக்கிய தேசியக் கட்சியிடமே உண்டு என்றார்.

No comments:

Post a Comment