Monday, August 9, 2010

ரவி கருணாநாயக்கவின் வாகனம் மீது சஜித் பிறேமதாசவின் ஆதரவாளர்கள் தாக்குதல்.

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பயணம் செய்த வாகனத்தின் மீது நேற்று இரவு 8.30 மணியளவில் கல்வீச்சு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெலியத்த பகுதி மக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் வேளையிலேயே இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இத்தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக சர்ச்சைகளைக் கிளப்பிவரும் சஜித் பிறேமதாசவின் ஆதரவாளர்களே மேற்கொண்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடமான சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லுனுகம்வெஹர, பெலியத்த மற்றும் திஸ்ஸமாஹாராம உள்ளிட்ட 5 பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுடன் கட்சியின் நிலைபாடு, அப்பகுதி நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி விட்டு கொழும்பு திரும்பும் வேளையிலேயே பெலியத்த நகர்பகுதியில் வைத்து ரவி கருணாநாயக்க பயணம் செய்த வாகனத்தின் மீது கல்வீச்சு இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

16 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாவும் இவர்களில் 5 பேரின் பெயரை பெலியத்த பொலீஸில் முறைப்பாட்டில் பெலியத்த பிரதேச சபை உறுப்பினர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதே நேரம் தாக்குதல் இடம்பெற்று சற்று நிமிடங்களில் பெலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழவொன்று அவ்விடத்திற்கு விரைந்திருந்தாகவும் இதுவரை அவர்களால் தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரையும் கைது செய்ய முடியாது போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட சஜித் பிறேமதாஸவின் ஆதரவாளர்கள் சஜித்திற்கு சொந்தமான திஸ்ஸமாரகமவில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினுள் உருவாகியுள்ள சர்ச்கைளுக்கு காரணமானவர்கள் எனக் கருதப்படும் சுமார் 20 பேர் மீது ஒழுக்கா ற்று நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விசா ரணைக்குழு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment