சன் சீ கப்பல் கனேடிய கடற்பரப்பில்.
200 இலங்கையர்களுடன் கனடா நோக்கி பயணிப்பதாக சந்தேகிக்கப்பட்ட எம்.வீ சன் சீ கப்பல் கனேடிய கடற்பரப்பிற்குள் இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கனேடிய கடற்படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த கப்பல் கனடாவை நோக்கி பயணிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவதானிக்கப்பட்ட இந்த கப்பல் இன்று மாலை அல்லது நாளை வௌ்ளிக்கிழமை கனேடிய கரையை வந்தடையுமென எதிர்பார்பதாக கனேடிய கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment