ரணில் - மகிந்த மீண்டுமோர் சந்திப்பு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையேயான சந்திப்பொன்று இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. அரசியல் யாப்பு மாற்றங்கள் தொடர்பான இணக்கப்பாடு ஒன்றினை காணும்பொருட்டு மகிந்தா எதிர்கட்சியினரை தொடர்ந்து சந்தித்து வந்தபோது இணக்கப்பாடுகள் எதுவும் காணப்படாத நிலையில் அவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்திருந்தது.
இந்நிலையில் அவசரச் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு தொடர்பாக ஆழும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட அறிந்திருக்கவில்லை எனவும் சந்திப்புக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுக்கப்படும் அழைப்புகள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment