Sunday, August 29, 2010

உப்புவெளி கிணற்றில் குழந்தையொன்றின் சடலம்.

திருமலை , உப்புவெளி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து குழந்தை ஒன்றின் சடலமொன்றை உப்புவெளி பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சடலம் திருமலை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதேநேரம் அம்பாறை கொண்டவட்டுவான் குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவரது வள்ளம் தடம்புரண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment