ஐ.தே.க யிலிருந்து உத்தியோக பூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. அனோமா.
ஜனநயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பகிரங்க அழைப்பிதழ் விடுத்திருந்த நிலை யில் அச்செய்தியினை ஜெனரல் பொன்சேகாவின் துணைவியார் அனோமா பொன்சேகா நிராகரித்துள்ளார்.
இவ்விடயத்தினை ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் தெரிவித்த அவர் ஊடகங்களில் வெளியாகியிருந்த இச்செய்தி தொடர்பாக தான் ஜெனரல் பொன்சேகாவிடம் கேட்டபோது அவர் ஏளனமாகச் சிரித்ததாக கூறியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் ஐ.தே.கட்சியிடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு வந்தாலும் ஜெனரல் தனது நிலையிலிருந்து மாறுவதற்கு சாத்தியங்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment