ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி விசேட பூசையும் , தேங்காய் உடைப்பும்.
இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா கைது செய்யபட்டு 8 மாதங்களாகும் நிலையில் அவரின் விடுதலை வேண்டி நேற்று கிக்கடுவ சீனிகம தேவாலயத்தில் வீசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.
இந்வாராதனைகளில் ஜெனரல் பொன்சேகாவின் துணைவி , பாராளுமன்ற உறுப்பினர் அருஜூனா ரணதுங்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளபோதும் அங்கு ஜேவிபி சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
ஜெனரல் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
0 comments :
Post a Comment