பிரபா கணேசன் , திகாம்பரம் அரசுடன் இணைவு. இல்லை என்கிறார் குமர குருபரன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்பிக்கள் இருவர் அரசுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இன்று அலறி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர்கள் அரசுடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பா.உ மனோ கணேசனின் சகோதரனுமாகிய மனோ கணேசன் , நாட்டில் யுத்தம் இடம்பெற்றவேளையில் மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தாகவும் இன்று யுத்தம் முடிவடைந்து அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற தருணத்தில் அரசுடன் இணைந்தே செயற்படவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது இம்முடிவுக்கு கட்சியின் தலைவரும் தனது சகோதரருமான மனோ கணேசனும் ஒப்புதல் தெரிவித்தாகவும் கூறியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கடசியில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவான பின்னர் பதவிகளுக்காக இவர்கள் கட்சி மாறுவது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமருகுருபரன் கருத்துரைக்கையில் அரசின் அழைப்பை ஏற்று இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவ்வாறு அவர்கள் கட்சி மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment