கொலொன்னாவையின் பொலிஸ் சார்ஜனின் சடலம்!
உடலில் வெட்டுக்காயங்களுடன் பொலிஸ் சார்ஜன் ஒருவரின் சடலம் கொலொன்னாவைப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய கொலொன்னாவை ஐ டி எச் பிரதேசக் கால்வாய் ஒன்றினருகிலிருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
சடலத்தினருகே கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் சார்ஜன், பன்னலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
நேற்று மாலை தனது கடைமையை முடித்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து அவர் வெளியேறிச் சென்றிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறியும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment