Tuesday, August 31, 2010

மேர்வின் சில்வா நிரபராதி. சிறிலங்கா சுதந்திரக் கட்சி விசாரணைக்குழு தீர்ப்பு.

சமுர்த்தி உத்தியோகித்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சர்ச்சைக் குரிய விவகாரத்தினை விசாரணை செய்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசாரணைக் கமிட்டி மேர்வின் சில்வா நிரபராதி என தீர்ப்பளித்துள்ளதுடன் , தீர்ப்பின் அறிக்கையினை நாட்டின் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.

அவர்களது அறிக்கையில் மேர்வின் சில்வா குறிப்பிட்ட சமுர்த்தி உத்தியோகித்தரை மரத்தில் கட்டியமைக்கான எவ்வித சாட்சிகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குற்றமிழைக்கின்றவர்களுக்கு கிராமிய மட்டங்களில் வழங்கப்படும் சம்பிரதாயபூர்வமான இத்தண்டனையை சமுர்த்தி உத்தியோகித்தர் விரும்பியே பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் இணையத்தளங்களால் வீடியோ செய்யப்பட்டு ஒளிபரப்ப பட்டிருந்த நிலையில் , மேர்வின் சில்வா இச்செயலை செய்தமைக்கு சாட்சியங்கள் இல்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசாரணைக் கமிட்டி அறிவித்துள்ளமை இலங்கையில் விசாரணைச் கமிட்டிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.

1 comment:

  1. மக்களை மடையர்கள் என்று நினைக்கும் அரசாங்கம் போது,
    அரசியல்வாதிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறிப் போய்விட்டது.

    நீதி, நியாயம் இன்றி, சிறிலங்கா பாதாளத்துக்குள் விழுந்துள்ளது.

    இனிவரும் காலம் சிறிலங்காக்கு அழிவு காலம். மகிந்தாவின் சிந்தனாவும் அதுவே.

    ReplyDelete