Monday, August 16, 2010

சன்.சி கப்பலில் வந்த இளைஞர் ஒருவர் மரணம்.

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவுக்கு புறப்பட்டு இருந்த தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற்பயணத்தின்போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். 37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் உள்ளது.

சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பலில் 350 ஆண்களும் 50 பெண்களும் 50 சிறார்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கனடாவுக்கு சென்ற அகதிகள் கரிபியன் நாடு ஒன்றிலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டனர். அந்த நாடு அக் கப்பல் அமெரிக்க நாட்டை நோக்கி செல்வதாகவே நினைத்திருந்தது.

    அக்கப்பலில் இறந்த அகதியின் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளன. அவர் முன்னர் ஒருதடவை அதே கப்பலில் வேலை செய்தவராவர்.

    அக்கப்பல் முன்னர் புலிகளினால் தாய்லாந்து நாட்டு கொடியின் கீழ் பனாமாவில் பதிவு செய்யப்பட்டு ஆயுத கடத்தல், போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது.

    அக்கப்பல், முன்னர் கேபி யின் கட்டுப்பாட்டுகுள் இருந்து, பின்னர் சூசையின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

    கடைசி கட்டத்தில் தோல்விகளை உணர்ந்த, புலித்தலைவர்கள் கட்டு, கட்டாக பணத்தை கொடுத்து தங்கள் குடும்பத்தயும், தங்கள் உறவினர்களையும் மட்டும் புலிகளின் வேகப் படகுகளில் ஏற்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளதை எவரும் அறிவர்.

    இதற்குமேல் விவரமாக, உங்களுக்கு விரைவில் அறியத்தரப்படும்.

    ReplyDelete