எஞ்சியுள்ள முன்னாள் புலிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது. பிரிகேடியர் சுதத்த.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளை உடனடியாக விடுதலை செய்யமுடியாது எனவும் அவர்கள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவர் எனவும் முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்ககைளுக்கு பொறுப்பான பிரிகேடியர் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
7950 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளையும் ஒருமிக்க விடுதலை செய்து அனர்த்தங்களை எதிர்நோக்க தயாரில்லை என தெரிவித்துள்ள அவர் கொழும்பில் உள்ள சகல சிறைக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்தால் என்ன நடக்கும் என அவர் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
மூவாயிரம் விடுதலைப் புலி போராளிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் ஈராக்கில் கடுமையான தடுப்பு முகாம்களில் 120000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை பற்றி எவரும் பேசுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜேவிபி யினருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு 5 வருடங்கள் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் அவ்வாறே முன்னாள் புலிகளுக்கும் புனர்வாழ்வு அளித்து அவர்களை விடுதலை செய்ய குறிப்பிடத்தக்க காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment