ஐ.கே.கட்சியின் யாப்பு மாற்றம் தொடர்பாக செயற்குழு நியமனம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மற்றம் தொடர்பாக இறுதி முடிவினை எட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இக்குழுவில் கட்சியின் சட்ட வல்லுனர்களான கே.என் சொக்சி , திலக் மாரப்பென , ரொனால்ட் சில்வா , மற்றும் விஜேயதாஸ ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சியின் தலைவர் மரணமடைந்தால் அல்லது தலைவர் சுயமாக பதிவி விலகினால் மாத்திரமே புதிய தலைவர் தெரிவுக்கு இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் கட்சியினுள் நிலவும் உட்பூசல்கள் தொடர்பாக தலைவர் ரணில் விக்கரமசிங்க , பிரதி தலைவர் கரு , பா.உ சஜித் பிறேமதாஸ ஆகியோரிடையே பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment