இந்திய அரசு வடக்கில் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு.
வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாகக் கட்டிக் கொடுக்கப்படவுள்ள ஆயிரம் மாதிரி வீட மைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை நேற்று இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டடுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளித் தது என்றும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக் கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடு களும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவு களில் 250 வீடுகளும் முதற்கட்டமாக இந்தியாவினால் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.
மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விவரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையில் உள்ள வட பகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள் ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment