தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த இராணுவ குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இத்தீர்பினை இலங்கை அரசாங்கம் நேர்மையான விசாரணைகளுக்கு இடமளிக்காது ஒருதலைப்பட்சமாக வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெனரல் பொன்சேகா தரப்பு வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது இவ்வழக்கின் சாட்சியங்கள் பதியப்பட்டு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்டவற்றை ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்த அவர், வழகறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது , இலங்கை சட்டதரணிகள் சங்க விடுமுறைகளை பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் தனது பார்வையை திருப்பவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் அங்கு பேசுகையில் கடந்த சில தினங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இத்தீர்ப்பு திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் , வழங்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஜெனரல் தரப்பு வழக்கறிஞர்களின் பிரசன்னம் இன்றி சாட்சியங்கள் பதிவு செய்யபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு நாட்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய பா.உ அனுரகுமார திஸாநாயக்க இராணுவ நீதிமன்றினை காட்டுநீதிமன்று என வர்ணித்திருந்தார். இராணுவ நீதின்றினை காட்டு நீதிமன்று என தான் குறிப்பிடவில்லை எனவும், இராணுவ குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பொன்று தொடர்பாக இந்நாட்டின் உயர் நீதிமன்று விசாரணை செய்திருந்தபோது அவ்வாறு குறிப்பிட்டிருந்தாகவும் தெரிவித்திருந்ததுடன் , இத்தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே அவர்கள் காட்டு நீதிமன்றின் தீர்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களை கொலை செய்து இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா இராணுவசேவையில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
0 comments :
Post a Comment