தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அழைப்பது குறித்து பேச்சு.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அழைப்பது குறித்து பேச்சுவார்த்கைள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பின்னர், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் மீள் குடியேற்றப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இன்னும் மூன்று வார காலத்திற்குள் மீள் குடியேற்ற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment