சீனப் பிரஜை தவறி விழுந்து பலி.
புத்தளம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின் நிலையத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் இன்று காலை மின் நிலைய கட்டிடமொன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.
21 வயதான அய்ஸப் என்ற சீன பிரஜையே உயிரிழந்தவராவார். நுரைச்சோலை அனல்மின்நிலைய நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.சீ.சீ நிறுவனத்தில் இவ்விளைஞர் கடமையாற்றி வந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இன்று காலை கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவ்விளைஞன் கட்டிடமொன்றின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment