Thursday, August 26, 2010

பர்தா, புர்கா பற்றி ஜாதிக ஹெல உறுமய கட்சி அமைச்சர் உதய கம்மன்பில

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகரும் அமைச்சருமான உதய கம்மன்பில பிரான்ஸ் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பா தெரிவித்ததாக லங்காதீப பத்திரிகையில் வெளியான தகவலின் முஸ்லிம்கள், இஸ்லாமிய உடை பற்றிய முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகினறது …. பர்தா அணிவதைத் தடை செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை …பிரான்ஸ் 2000 புர்கா அணியும் பெண்களுக்கு விடுதலை வழங்குவதாக கூறி 50 லட்சம் முஸ்லிம்களை பிரான்ஸ் பழி வாங்கியுள்ளது ….ஒருவர் தனது உடலை முற்றாக மறைபதற்கு விரும்பினால் அதற்கு சட்டம் மூலம் தடைபோடுவது பாரிய குற்றமாகும்….ஒரு நிறுவனத்தின் சீருடைக்கு பர்தாவோ , புர்காவோ அணிவது பொருத்தமற்றதாக இருப்பின் அவ்வாறான சீருடைக்கு பர்தா அணியக்கூடாது என்று கேட்பதற்கும், அவ்வாறான் தொழில்களுக்கு பர்தா அணிவோரை சேர்க்கா திருபதற்கும் உரிமையுண்டு...

…. பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது இஸ்லாம் உதயமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்து வந்துள்ளது பர்தாவிலிருந்து புர்கா வரை பல்வேறு முஸ்லிம் ஆடைகள் கடந்த காலத்திலிருந்து தற்காலதிற்கும் உரித்தாக இருப்பதோடு, சில நாடுகளில் எதிர்காலத்துக்கு உரித்தாகாது என மேற்கு நாடுகளில் இருந்து கிடைகும் தகவல்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது இங்கு பர்தா மற்றும் புர்கா என்ற வசனங்களை பயன்படுத்துவது குர் ஆன்- அர்த்தபடியன்றி சங்க மொழி வழக்கின் அடிபடையிலாகும் விரிவாக பார்க்க

அதன் படி பர்தா என்பது தலையுட்பட உடலின் மேற்பகுதியை மறைபதற்கு பயன் படுத்தும் பெரிய கைகுட்டையாகும். புர்கா என்பது முழு உடலையும் மறைக்கும் வகையில் அணியும் ஆடையாகும்

கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் பாராளுமன்றம் நாட்டின் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் நோக்கில் ஆடையணிவதை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது அந்த சட்டத்துக்கு எதிராக ஒரு வாக்கும் ஆதரவாக 335 வாக்குகளும் கிடைத்தன

இது தொடர்பாக இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக பல காரணங்களை முன்வைத்தனர் பாதிக்க பட்ட பெண் கள் விடுதலை பெறுவதற்கு , பெண்களது இனிய சிறப்பினை அனுபவிக்கும் உரிமை சமுகத்துக்கு வழங்க படுவதற்கு , பேசும் ஆண் பெண்ணின் முகத்தில் ஏற்படும் உணர்வினை கண்டு கொள்வதற்காக உரிமையை உறுதிபடுத்தல், குற்றவாளிகள் முகத்தை மறைப்பதை தடுத்தல், விசேடமாக பிரான்சின் காலாச்சாரத்துக்கு புர்கா பொறுத்த மற்றது போன்ற காரணங்கள் அதில் அடங்கியிருந்தன

மேற்குறிப்பிட்ட இனிமையான சொற்களுகுள் உண்மையான நோக்கத்தை மறைக்க முயன்றபோதும் அது அவர்கள் தம் நாட்டில் வாழும் சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தலாகும் மறு சொல்லில் கூறினால் சுமார் 2000 புர்கா அணியும் பெண்களுக்கு விடுதலை வழங்குவதாக கூறி 50 லட்சம் முஸ்லிம் களை பழி வாங்கியுள்ளார்கள்

ஆண்கள் தம் உடலை காட்சிப் படுத்த பெண்களுக்கு முழு உடலையும் முடிவிடுவதட்கு ஒரு நாட்டின் சட்டம் மூலம் வற்புறுத்தபடுமாயின் அது பெரும் தவறாகும் அதே போன்று பெண் ஒருவர் தனது உடலை முற்றாக மறைபதற்கு விரும்பினால் அதற்கு சட்டம் மூலம் தடைபோடுவது பாரிய குற்றமாகும் பிரான்ஸ் ஒரு பாரதுரமான குற்றத்தை இழைத்துள்ளது

…இதில் விதிவிலக்குகள் உண்டு அவற்றை நான் ஏற்று கொள்கின்றேன் அரச அதிகாரிகளில் முகத்தை காட்டும் சந்தர்பங்கள் .. அதற்கு அதிகாரிக்கு உரிமையுண்டு .. இதை பெண் அதிகாரியின் ஊடாக மனிதாபிமானமாக செய்யலாம்

அதே போன்று ஒரு நிறுவனத்தின் சீருடைக்கு பர்தாவோ , புர்காவோ அணிவது பொருத்தமற்றதாக இருப்பின் அவ்வாறான சீருடைக்கு பர்தா அணியக்கூடாது என்று கேட்பதற்கும், அவ்வாறான் தொழில்களுக்கு பர்தா அணிவோரை சேர்க்கா திருபதற்கும் உரிமையுண்டு அதே போன்று பர்தா அணிவதை வற்புறுத்துவதனைத் தடை செய்வதற்கு இன்று உரிமையுண்டு ஆனால் பர்தா அணிய விரும்பும் ஒருவருக்கு அணிவதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை …. தடை செய்யப்படவேண்டியது பர்தாவையன்றி வற்புறுதலையாகும் அப்போது விரும்புபவர்களுக்கு பர்தாவும் விரும்பாதவர்களுக்கு பர்தாவிலிருந்து நீங்கி விடுவதற்கு இயலுமாக இருக்கும்

பர்தா தடையில் மிகவும் கேளிதனமான விடையம் என்வென்றால் இலங்கையில் சிறுபான்மையினரைக் கவனிக்க வேண்டிய முறை போதிக்க வரும் நாடுகளிடையே பிரான்ஸ் முதன்மையாய் இருப்பதாகும் மற்றவர்களின் கலாச்சாரம் நம்பிக்கை மற்றும் தனிமனித சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென பிரான்ஸ் எமக்கு தொடர்ச்சியாக நினைவு படுத்தி வருகின்றது தாம் செய்யாத ஒன்றை செய்யுமாறு மற்றவரைத் தூண்டுவதனை வேடனின் போதனை என நாம் கூறுகின்றோம் ….. அவர்கள் போதிப்பது வேடனின் போதனை என இபோதாவது நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்

….. பிரான்சில் முஸ்லிம்களுக்கு இலங்கையில் கிடைத்துள்ள சுதந்திரம் இல்லை அங்கு சுதந்திரம் பர்தாவுக்கு மட்டும் மட்டுபடுத்த படவில்லை பள்ளி வாசல் ஒன்றை அமைக்கும்போது அது வெட்டித் தெரிபடும் முறையில் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

பாரிய பள்ளி வாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டம் ஒன்றை முன்வைத்தால் அது நகரின் கட்டடக் கலை வடிவமைப்புக்கு தடையாக இருப்தாக கூறி அனுமதி மறுக்கபடுகின்றது

பர்தாவுக்கு மட்டுமின்றி முஸ்லிம் தொப்பி அணியும் ஆண்களும் சமுகத்தில் ஒதுக்கபடுகின்றார்கள் இலங்கையின் நிலை இதற்கு முற்றிலும் மாற்றமாகவுள்ளது முஸ்லிம்களது மத சுதந்திரம் அரசியலமைப்பு சட்டம் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது

வரலாற்றின்படி இலங்கையில் முஸ்லிம்கள் குடும்பம் குடும்பம்களாக குடியேறவில்லை வியாபாரத்துக்கு வந்த முஸ்லிம்களது மனைவி மார்களாகியது சிங்கள , தமிழ் பெண்களாகும்

500 வருடங்களாக முஸ்லிம்களது சனத்தொகை 8 சதவீதமாக வளர்ச்சி கண்டது இடபெயர்வினாலன்றி முஸ்லிம்களுடன் விவாகமான பெளத்தர்களும் இந்துக்களும் இஸ்லாத்தை ஏற்று கொண்டதளாகும் எவரும் அதனை சட்டதினலோ, பலாத்காரமாகவோ அதனைத் தடுக்க முயற்சிக்க வில்லை.

2 comments:

  1. முதலில் உடை என்பது முக்கியமாக காலநிலை, சூழ்நிலை, மற்றும் சந்தர்ப்பத்திக்கு ஏற்றதாக அமையவேண்டும்.

    அக்காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அராபிய பாலைவனகளில் வெயில், புழுதி, காற்று போன்றவற்றிலிருந்து உடம்பை பாதுகாப்பதக்கு உருவாக்கப்பட்ட உடைகளே அந்த பர்தா, புர்கா.

    இதைப் புரிந்துகொள்ளாமல், மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் அதை கலாச்சாரமாக அணிவது மிகவும் பொருத்தமற்றது.

    ReplyDelete
  2. So, Ul aadaihalthan ikkalaththitku siranthathu enru solla waruhireerhala?

    ReplyDelete