மாணவர் சங்கத் தலைவர் கைது .
றுகுணு பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் நிர்வாக பிரிவு மாணவர்கள் சங்கத்தலைவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் , கடந்த 16ம் திகதி பல்கலைக் கழகத்தின் உபவேத்தரை தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவரை கைது செய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக் கழக மாணவன் ஒருவன் பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கான நீதி கோரி வெகுஜனப் போராட்டங்கள் மாணவர்களால் முன்னனெடுக்கப்பட்டபோது பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பல்கலைக்கழக வழாகத்தினுள் முடக்கப்பட்டனர் என்பது யாவரும் அறிந்தது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தபோது நீதி கேட்டுப் போராடிய அனைவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பல்கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர்கள் சங்கத்தலைவர் உடுல் பிறேமரத்ன தெரிவித்துள்ளார், அத்துடன் நேற்று முன்தினம் இரவு ருகுணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் இனம்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாகவும் மாணவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் உடுல் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment