அமைச்சர் மேர்வின் சட்டத்தை கையிலெடுத்தார். சமுர்த்தி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு.
களனி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களில் பங்குகொள்ளத் தவறிய சமுர்த்தி ஊழியர் ஒருவரை மாமரம் ஒன்றில் கட்டிவைத்த மேர்வின் சில்வாவின் செயலினை கண்டிக்குமுகமாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரைக்கும் நாடாளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றாதிருப்பதற்கு சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்த அனைத்துச் சங்கங்களும் இந்த பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சமுர்;த்தி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த உடவத்த தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் களனியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இன்று பிற்பகல் தனது வீட்டிற்கு அழைத்து அவரை மா மரமொன்றில் கட்டி வைத்தது அவமானப் படுத்தியிருந்தார். இச்சம்பவம் இடம்பெற்றபோது அங்கு ஊடகவியலாளர்கள் குழுமியிருந்ததுடன் சம்பவம் முற்றாக வீடியோ செய்யப்பட்டு அது பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபரை மரத்தில் கட்டுமாறு மேர்வின் சில்வா கட்டளையிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட அதிகாரி கடமையை செய்யத் தவறினாரா என்ற கேள்விக்கப்பால் அவர் தவறிழைத்திருந்தால் அவரை தண்டிக்கும் அதிகாரம் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்வி.
0 comments :
Post a Comment