ஜெனரல் பொன்சேகா குற்றவாளி என இராணுவ நீதிமன்று தீர்ப்பு.
ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ குற்றவியல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்து முதலாவது வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இராணுவ சேவையில் இருந்துவண்ணம் அவர் அரசியலில் ஈடுபட்டார் என்பது நீருபிக்கபட்பட்டுள்ளதாக நீதிமன்று தீர்ப்பளித்துள்ளதாக இராணுவ உயரதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏஎஃபி செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
தீர்ப்பில் ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பதக்கங்கள் , மற்றும் பதவி நிலைகளை வாபஸ்பெறுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் , அவற்றை நிறைவேற்றுவதற்கு முப்படைகளின் தளபதி மகிந்த ராஜபக்ச கையொப்பம் இடவேண்டும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment