ஒபாமாவுடன் நேரடிப் பேச்சு நடத்த தயார்: ஈரான் அதிபர்
அனைத்துலக நாடுகள் அக்கறை கொள்ளும் அம்சங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் நேரடிப் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாக ஈரானிய அதிபர் முகம்மது நிஜாத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தின் போது அமெரிக்க அதிபருடன் நேரடி பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று முகம்மது நிஜாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்தகைய வாய்ப்பு கிடைக்கும்போது உலகப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் இருவரும் நேரடியாக பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் ஈரான் அதிபர் கூறினார். வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களுக்கு தொலைக்காட்சி வழி உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகமது நிஜாத் அடுத்த மாதம் நியூயார்க் செல்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஈரானின் அணுவாயுதத் திட்டம் தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தகராறு நீடிக்கிறது.
0 comments :
Post a Comment