கே.பிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது.
இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என ஜே.வி.பியின் பிரதானச் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பியின் சொத்துக்கள் சட்டப்படி அரச உடமையாக்கப்பட்டிருக்கவேண்டும் என குறிப்பிடும் அவர், ஆனால் இதுவரையில் அவரது சொத்துக்கள் அரச உடமையாக்கப்படவில்லை எனவும் கூறினார்.
எனவே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவேண்டும் என குறிப்பிடுட்ட அவர், அப்படி ஆஜர்படுத்தப்படுவாரானால் அவரின் சொத்துக்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் அவருக்கு சொந்தான சொத்துக்களை கைமாற்றிக் கொண்டதன் அடிப்படையிலேயே அவர் சுதந்திரமாகவும், சகலவசதிகளுடனும் கவணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
எனவே தான் அவர் மீது குற்றங்கள் எதனையும் சுமத்தாது அவருக்கு பொதுமான்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடும் ரில்வின் சில்வா, இதன் மூலம் கே.பிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் இரகசிய உடன்படிக்கை உள்ளமை தெளிவாவதாகவும் கூறினார்.
0 comments :
Post a Comment