ரணில் - பொன்சேக்கா விசேட சந்திப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா ஆகியோருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (18) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
சரத் பொன்சேக்காவை விடுவித்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஐ.தே.க. தலைவருடன் அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மறுபுத்தில் சரத் பொன்சேக்காவுடன் ஜன நாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத் மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருன்கிறது.
அத்துடன் சரத் பொன்சேக்காவுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக்க சில்வாவின் மனைவியும் இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
0 comments :
Post a Comment