Sunday, August 29, 2010

யுத்தகாலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இருசாராரும் பொறுப்பு.

30 வருடங்களாக நடைபெற்ற பிரச்சினைகளால் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயரந்தவர்கள் அனைவரும் இங்கு வந்து குடியமர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் என்றும் கடந்தகால யுத்தம் காரணமாக ஏற்பட்டபாதிப்புகளுக்கும் இருசாராரும் பொறுப்பு என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

மட்டு- அம்பாறை மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களான பெரிய புல்லுமலை, சிப்பிமடு, கோப்பாவெளி, சமகிபுர, பதியத்தலாவ போன்ற இடங்களிலிருந்து கடந்த கால யுத்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுகளில் தஙகியுள்ளனர்.

இந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் மகா ஓயா, மொல்லையாகம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்கு சென்று இருந்தால் அங்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது நீங்கள் தங்கியுள்ள இடங்களில் இருக்க விரும்பினாலும் இருக்கலாம்.

உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பNது எங்களுடைய நோக்கமாகும். உங்களுடைய தேவைகள் குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள். நம்முடைய ஜனாதிபதி அவர்களுடைய நோக்கத்துக்கு அமைவாக அனைத்து மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றவே செயற்பட்டு வருகிறோம் என்றார்.

இதேபோன்று பெரிய புல்லுமலை பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பெரிய புல்லுமலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர்கள் ஈடுபட்டனர்.

இங்கு உரையாற்றிய மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், புல்லுமலைப்பிரதேசம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். ஏனென்றால் தமிழ் சிங்களமக்கள் இணைந்து சந்தோசமாக வாழ்ந்த பிரதேசம் என்பதுடன் மிகவும் வளமான பிரதேசமும் கூட. யுத்தம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டது.

ஆரம்பத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு குடியமர வரும் படி சொன்னபோது யாரும் வரவில்லை. வீடுகளும் அமைக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பொழுது அனைவரும் வர விரும்புகின்றமை மகிழ்ச்சியான விடயம். இப்போது அபிவருத்தித் திட்டங்கள் யாவும் வடக்குக்குத்திருப்பப்பட்டுள்ளமையால் மிகக்குறைந்தளளவிலேயே இங்கு வேலைகளைச் செய்ய முடிகிறது. வீட்டுத்திட்டங்களையும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்ககவும் நாங்கள் பல்வேறு தரப்பினருடனும் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ , இரண்டரை லட்சம்பேர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த போது இருந்த கவனம் உங்களுடைய விடயங்களில் இருக்கவில்லை.என தெரிவித்தார்;.

இடம்பெயர்ந்த மக்களை மீளக:குடிமர்த்துவது தொடர்பான அமைச்சர்களின் விஜயத்தின் போது காடு மண்டியுள்ள பெரிய புல்லுமலைப்பிரதேசத்திலுள்ள கொஸ்கொல்லை கிராமத்தினையும் பார்வையிட்டு அங்கு மக்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் ரவீந்திரன்,மகாஓயா பிரதேசசபைத்தலைவர்,பிரதேச செயலாளர் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com