Thursday, August 19, 2010

பொலிஸார் என்னை கழுத்தில் தள்ளி அடித்து சிறைக் கூண்டில் அடைத்தனர். பா.உ விஜித கேரத்.

ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய் என கடந்தவாரம் காலியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய விஜித கேரத் தன்னை பொஸிஸார் கழுத்தில் பிடித்து அடித்து பொய்குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைத்ததாக நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு பேசுகையில் , ஜனநாயக முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸில் முறையிடுவதற்காக கடந்த 12.07.201 பிற்பகல் 5 மணியளவில் நான் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் குமார , அர்ஜூணா ரணதுங்க , மாகாண சபை உறுப்பினர் நளின் கேவகே ஆகியோருடன் பொலிஸ் நிலையம் சென்றேன். இது தொடர்பாக முதலில் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவைச் சந்தித்து விடயத்தை விளக்கினோம். பின்னர் பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படும் இடத்திற்கு சென்று முறைப்பாட்டை தெரிவித்தபோது, முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு போதிய அதிகாரிகள் இல்லை என அங்கிருந்த பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த நாம் இது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சர் சிசிர குமாரவிடம் தெரிவிப்பதற்கு சென்றோம். அங்கு காவற்கடமையில் இருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் எம்மை எஸ்பி சிசிர குமாரவிடம் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது நான் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை அவருக்கு தெரிவித்தபோது அவர் எனது கழுத்தில் பிடித்து பின்னே தள்ளினார். அச்சமயம் அங்கு பார்த்துக்கொண்டிருந்த ஐபி டயஸ் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து எனது முகம் , தலை , செஞ்சு என கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தனர். இவ்விடயங்களை பார்த்துக்கொண்டிருந்த எஸ்பி சிசிர குமார, ஐபி கிரியல்ல ஆகியோர் எம்மை கூண்டிலடைக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அதிகாரி ஒருவரை தாக்கியதாக பொய்குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தி எம்மை கைது செய்து தடுத்து வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் நீதிகேட்டு பொலிஸ் நிலையம் சென்றபோது இந்நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என கேள்வி பாராளுமன்றில் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment