எம்மிடம் பலமான அரசாங்கம் உண்டு. மேலும் ஐந்து வெற்றிடங்கள்.
பொது நிர்வாக வேவைகள் சபையின் 28 ஆவது வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் வலுவான அரசாங்கம் ஒன்று உள்ளதாகவும் , அற்கும் அப்பால் பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையினை பெற்றுக்கொள்வதற்கு 5 ஆசனங்களே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே ஐந்து கதவுகள் என்றும் திறந்திருப்பதாகவும் வேண்டியவர்கள் வந்து திறப்பினை எடுத்து தமக்கான கதவுளை திறந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்பு அரசுடன் யாரையும் இணைத்து கொள்ளப் போவதில்லை என்று சொன்ன போதிலும், தற்போது அரசுடன் யாரும் வந்து இணைந்து கொள்ளலாம் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றமை ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்டுவரும் பேச்சுக்களை நிராகரித்துள்ளதாகவே கருத முடிகின்றது .
0 comments :
Post a Comment